Breaking News: செங்கோட்டையனின் கட்சி பதவி பறிப்பு

இந்த நிலையில் கட்சியின் பொதுச் செயலாளரை சந்தித்து கட்சியில் இருந்து வெளியே சென்றவர்களை கட்சியுடன் இணைக்க வேண்டும் என்ற கருத்தை குறிப்பிட்டிருந்தோம் அதனை அவர்...
senkottaiyan remove all positions
senkottaiyan remove all positions
Published on
Updated on
1 min read

அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி பூசல் நிலவி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செப் -5 மனம் திறப்பதாக கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று தனது வீட்டில் இருந்து ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ஊர்வலமாக சென்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் “ஏழை எளிய மக்களுக்காக, மாணவர்களுக்காக, உழைப்பாளர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி தான் அதிமுக, அம்மாவின் மறைவிற்கு பிறகு அனைவரும் ஒருமனதாக சசிகலா அவர்களை தேர்ந்தெடுத்தோம். மீண்டும் ஒரு சூழ்நிலையில் முதலமைச்சர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது, இரண்டு முறை எனக்கு வாய்ப்பு இருந்தும் கட்சியின் ஒற்றுமைக்காக நான் எனது நிலைப்பாட்டில் இருந்து கட்சிக்காக பணியாற்றி வந்தேன். 2017 க்கு பிறகு வந்த தேர்தலில் களத்தில் சில பிரச்சனைகளை நாம் சந்தித்தோம், இந்த நிலையில் கட்சியின் பொதுச் செயலாளரை சந்தித்து கட்சியில் இருந்து வெளியே சென்றவர்களை கட்சியுடன் இணைக்க வேண்டும் என்ற கருத்தை குறிப்பிட்டிருந்தோம் அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

கட்சியை விட்டு வெளியேறியவர்களை எல்லாம் கட்சியில் இணைத்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். வெற்றிவாகை சூட வேண்டும் என்றால் கட்சியை விட்டு வெளியில் சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும். கட்சியை விட்டு வெளியில் சென்றவர்களும் அவர்களின் கருத்துக்கள் மூலமும் கடிதங்கள் மூலமும் எந்த நிபந்தனையும் இன்றி ஒன்றிணைய வேண்டும் என கூறி வருகின்றனர். எனவே இந்த தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும். கட்சியிலிருந்து வெளியில் சென்ற முக்கிய பதவி வகித்தவர்களை ஒன்றிணைத்தால் வெற்றி என்ற இலக்கை மட்டும் இல்லை மாபெரும் வெற்றியை அடைய முடியும் என பேசியிருந்தார்.

இந்த நிலையில், மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்திற்காக இன்று திண்டுக்கல்லில் தங்கியிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி, தலைமை நிலையச் செயலாளர் எஸ் பி வேலுமணி வந்துள்ளார்கள். இவர்களுடன் செங்கோட்டையன் பேச்சு தொடர்பாக இபிஎஸ் அவசர ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது செங்கோட்டையனின் கட்சி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு K.A செங்கோட்டையனின் கட்சி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்துள்ளார்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com