இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு. ஶ்ரீவைகுண்டத்தில் 1924-ம் ஆண்டு பிறந்த இவர் 18 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தேச விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றார். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் அவர் 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பதவியில் 13 ஆண்டுகள், விவசாயிகள் சங்கத்தில் 25 ஆண்டுகள் என இன்றளவும் மக்களுக்கான போராட்டங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் நல்லகண்ணு. இன்றைய இளம் தலைமுறைக்கு முன்னோடியாக திகழும் எளிமையான தலைவர் நல்லகண்ணு. அனைத்துக் கட்சித் தலைவர்கள், தொண்டர்களால் பெரிதும் போற்றப்படுகிற தலைவராக இருந்தவர்.
இவருக்கு சமீப காலமாக வயது மூப்பு காரணமாகவும், சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதால் உடல் நல குறைபாடு ஏற்பட்டு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனிற்றி உயிரிழந்திருக்கிறார். சில தினங்களாக அவர் இறப்பு சார்ந்த வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது மருத்துவமனை மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பக்கத்தில் இவரது இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவரது இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செலுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.