செந்தில் பாலாஜி விவகாரம் - முதலமைச்சர் இன்று ஆலோசனை!

செந்தில் பாலாஜி விவகாரம் - முதலமைச்சர் இன்று ஆலோசனை!
Published on: 
Updated on: 
1 min read

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் சர்வாதிகார போக்கு குறித்து சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசின் மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் முகஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.  

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவிட்டு தற்போது அதனை திரும்ப பெற்றிருக்கக் கூடிய நிலையில், முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக அரசுக்கு எதிராக ஆளுநர் கொடுக்கும் தொடர் இடையூறுகள் குறித்து  உச்சநீதிமன்றத்தில் முறையிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com