“மக்கள் தண்ணீர் கேட்டும் கவனிக்கவில்லை.. அதனால்தான் செருப்பு வீசினார்கள்..” - பகீர் கிளப்பிய செந்தில் பாலாஜி..!
கரூரில் நடந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி “கரூரில் நடந்தது மிகவும் துயரமான சம்பவம் இதை யாரும் அரசியலாக்க வேண்டாம். மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என் தொகுதியில் ஒரு பிரச்சனை என்றால் நான் மக்களுக்காக இருப்பேன். அன்று நான் எனது கட்சி அலுவலகத்தில் இருந்தேன் செய்தி கேட்டதும் மருத்துவமனைக்கு சென்றேன் என்னை போலவே மற்ற கட்சி நண்பர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய மருத்துவமனைக்கு வந்தனர்.
தண்ணீர் பாட்டில்கள் கொடுத்தது மனிதாபிமானம்:
உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நான் மருத்துவமனையின் சிசிடிவி காட்சியினை கூட உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அதே போல இரவு நேரம் என்பதால் எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை எனவே எங்களிடம் இருந்த தண்ணீர் பாட்டில்களை கொடுத்தோம் இதை அரசியலாக்க வேண்டாம். விஜய் ஏன் பிரச்சார இடத்திற்கு வருவதற்கு முன் வாகன முன் இருக்கையில் அமராமல் வாகனத்திற்குள் சென்றார். அவர் முன் இருக்கையிலோ அல்லது வாகனத்திற்கு மேல் பகுதியிலோ நின்று கை அசைத்திருந்தால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது. வழியில் விஜய்யை பார்க்க காத்திருந்தவர்கள் அங்கேயே பார்த்து விட்டு சென்றிருப்பார்கள்.
என்னை பற்றி பேசும்போது செருப்பு வீச படவில்லை:
என்னை பற்றி பேசும்போது செருப்பு வீசப்பட்டது என கருத்துக்கள் பரவி வருகிறது நீங்கள் கவனித்தால் தெரியும் விஜய் பேச தொடங்கிய 5 வது நிமிடத்திலேயே செருப்பு வீசப்பட்டது. காரணம் தண்ணீர் கேட்டு மக்கள் கூக்குரல் போட்டது கேட்கவில்லை என்பதால் அவர்கள் தங்களது கவனத்தை ஈர்க்க அவ்வாறு செருப்புகளை வீசி இருக்கின்றனர். மேலும் அந்த விவாதத்தில் என்னை பற்றி பேசியது ஒரு 10 நிமிடம் பேசியிருப்பார் அப்போது எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பரப்புபவார்கள் கொஞ்சம் உண்மையை தெரிந்து கொண்டு பேசுங்கள்.
ஒரு தண்ணீர் பாட்டிலாவது இருந்ததா?
தண்ணீர் பற்றாக்குறையினால் மக்கள் அவதிப்பட்டனர் கட்சியினர் சார்பில் அடிப்படை வசதிகள் கூட ஏற்பாடுசெய்யப்படவில்லை. அதற்கு உதாரணமாக கூட்டம் நடந்த இடத்தில் எத்தனை செருப்புகள் இருந்தது ஆனால் அங்கு ஒரு தண்ணீர் பாட்டில் கூட இல்லை. அரசு தரப்பில் செய்ய வேண்டிய பாதுகாப்பு பணிகளை சரியாக தான் செய்திருகின்றனர். கட்சி சார்பிலும் சில முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் அதை அவர்கள் செய்யவில்லை.
விஜய் போலீசார் சொன்னதை கேட்கவில்லை:
கூட்டம் அதிகமாக இருப்பதால் காவலர்கள் பிரச்சாரம் செய்ய தேர்வு செய்திருந்த இடத்திற்கு முன்னதாகவே பேச சொல்லி இருந்தனர், ஆனால் அவர்கள் அதை கேட்காமல் நாங்கள் முடிவு செய்த இடத்தில் தான் பேசுவோம் என பிரச்சாரம் செய்தனர். அப்போது அதிக மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர். கூட்டம் அதிகமாக இருக்கும் போது நிர்ணயிக்கப்பட்ட பட்ட இடத்தை தவிர்த்து வேறு இடத்தில் பேசுவது தவறில்லை.
இன்னும் சில செய்திகளை நான் இப்போது சொல்ல முடியாத அது ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு இடையூறாக இருக்க கூடும் எனவே விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு பிறகு இதை பற்றி நான் இன்னும் தெளிவாக பேசுகிறேன்” என கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.