செந்தில் பாலாஜியின் ஃபஸ்ட் டார்க்கெட் தங்கமணிதான்: கொரோனா பிரச்சனை முடிந்ததும் ஆக்‌ஷன்

செந்தில் பாலாஜியின் ஃபஸ்ட் டார்க்கெட் தங்கமணிதான்:  கொரோனா பிரச்சனை முடிந்ததும் ஆக்‌ஷன்
Published on
Updated on
1 min read

கொரோனாவில் இருந்து மீண்டு தமிழகம் சகஜ நிலைக்கு திரும்பிய உடன் மின்சாரத்துறையில் நடந்த ஊழல் வெளிக்கொண்டு வரப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் அரசு மருத்துவமனையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலத்தில், ஒரு வாரத்தில் இரும்பாலையில் 500 படுக்கைகள் தயார் செய்யப்படும் என்றார். மேலும், தவறான கொரோனா பரிசோதனை முடிவுகளை கொடுத்து வந்த இரண்டு தனியார் ஆய்வகங்களுக்கு சீல்  வைக்கப்பட்டுள்ளது எனக்கூறிய அவர், தவறு செய்யும் தனியார் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனாவில் இருந்து மீண்டு தமிழகம் சகஜ நிலைக்கு திரும்பிய உடன் மின்சாரத்துறையில் நடந்த ஊழல் வெளிக்கொண்டு வரப்படும் என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com