EXCLUSIVE : கவுண்டர் கொடுத்த தவெக நபர்.. விஜய்யை வச்சு செய்த செந்தில்வேல் - ஆடிப்போன தவெக தொண்டர்கள்!

இளைஞரணியை தொடங்கியவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை நான் பணிவோடு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்...
EXCLUSIVE : கவுண்டர் கொடுத்த தவெக நபர்.. விஜய்யை வச்சு செய்த செந்தில்வேல் - ஆடிப்போன தவெக தொண்டர்கள்!
Admin
Published on
Updated on
2 min read

மாலை முரசின் "மக்கள் அரங்கம்" விவாத மேடையில், 2026 தேர்தல்.. GEN Z தலைமுறை ஆதரவு யாருக்கு? குறித்த விவாதத்தில், மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் கலந்துகொண்டு பேசிய முழு உரை,

"முதல்ல பேசின அன்பு சகோதரர் இளவல் சபீர் சொன்னார், இப்ப வந்து இளைஞர் அப்படிங்கிறத இளைஞர்களை நோக்கி திமுக செல்வதே மரியாதைக்குரிய திரு விஜய் அவர்களினுடைய வருகைக்கு பிறகு அவரை பார்த்து பயந்துதான் அவங்க வந்து போறாங்க அப்படின்னு சொன்னார். திருவாளர் விஜய் அவர்கள் பிறந்த ஆண்டு 19 4 1968ஆம் ஆண்டு. இளைஞரணியை தொடங்கியவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை நான் பணிவோடு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அதனால ஏதோ விஜயை பார்த்து நாங்க இளைஞரணிக்கு எல்லாம் போகல, அவர் பிறக்குறதுக்கு முன்னாடியே இளைஞரணியை கண்ட இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம்.

இளைஞர்கள் இன்றைக்கு திமுக பக்கம் இருக்கிறார்களா அப்படின்னு கேட்டாரு. ரொம்ப நாள் இல்ல சகோதரரே, மிகச் சமீபத்தில்தான் திருவண்ணாமலையில் ஒரு லட்சம் 5 ஆயிரம் இளைஞர்களை திரட்டி... அவங்க தொண்டர்கள் கூட இல்ல, நீங்க பாருங்க நான் ரொம்ப கண்ணியத்தை காப்பாத்துனேன். தம்பிகளா நீங்க கூட கூட பேசினீங்கன்னா எனக்கு வேற ஒரு முகம் இருக்கு, அதை நான் காட்டுனேனா நீங்க யாரும் இங்க இருந்து பேச முடியாது. நான் அந்த லெவலுக்கு நான் எல்லாருடைய கருத்தையும் மதிக்கிறேன்.

திருவண்ணாமலையில 1,35,000 பேரை திரட்டினார்கள் அல்லவா, அவர்கள் தொண்டர்கள் அல்ல, வெறும் நிர்வாகிகள். அதுவும் வடக்கு மண்டலம் மட்டுமே. அதுல இன்னொன்னையும் நான் அடிக்கோட்டிட்டு காட்ட விரும்புகிறேன். 1 லட்சத்தி 35 ஆயிரம் பேருக்கும் நாற்காளிகள் போடப்பட்டிருந்தது. ஒரு நாற்காலி கூட உடையல தம்பி. ஆடு மாடுகளை போல பட்டியில் அடைப்பதை போல நீங்கள் ஈரோட்டில் அடைத்தீர்களே மக்களை, நீங்கள் சமூகநீதி சுயமரியாதையை பற்றி பேசுவதற்கு என்ன தார்மீக உரிமை உங்களுக்கு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

அப்புறம் ரமேஷ் பேசுகின்ற பொழுது மதச்சார்பின்மை குறித்து பேசினார். இப்ப இவங்க தலைவர் அறிக்கை போட்டிருக்கிறாரான்னு அவருடைய ட்விட்டர் தேடி தேடி தேடி தேடி பார்க்கிறேன் நான், லென்ஸ் எல்லாம் வச்சு தேடி பார்த்தேன், வாய்ப்பே இல்லை. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் விதமாக பெண்கள் குழந்தைகள் மற்றும் சர்ச்சுகள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறதுன்னு இவங்க பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஒரு பதிவு போட்ுருக்கிறார். ஆனா அந்தத் தாக்குதல் சம்பவம் எங்க நடக்குது? அமெரிக்காலயா, ஆப்பிரிக்காலையா? ஐயா சொல்ல மாட்டாரு. இந்தச் சமூக விரோத செயல்களை செய்வது யார்? அதை சொல்ல மாட்டாரு. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்துருக்கலாம் தம்பி.

மதுபானம் விக்கறதுலல்லாம் பிரச்சனை இல்ல, அத கவர்மெண்ட் விக்கக்கூடாது தனியார்ட்ட கொடுத்துருங்கன்னு இவங்க கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சொல்றாரு. 'கருப்பன் குசும்புக்காரன்' அப்படின்னு ஒரு படத்துல சொல்ற மாதிரி, அவரு டாஸ்மாக்க அவர் நடத்துறதுக்கு அடி போடுறாரு. தனியார்ட்ட கொடுத்து நீங்க போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குறதா? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துறதுல ரெண்டு இருக்கு, ஒன்னு சர்வே இன்னொன்னு சென்சஸ். சென்சஸ் எடுக்கறதுக்கான அதிகாரம் ஒன்றிய அரசுக்கு மட்டும்தான் இருக்குது.

இன்னைக்கு நிகழ்ச்சி நடத்துறதே விஜய்க்கு பயந்துதான்னு சொல்றீங்க. அவர் பயங்கர தைரியசாலி, ஏதாவது பிரச்சனைன்னா பணையூருக்குள்ள போயடுவார் சார். உங்கள் கட்சியை சேர்ந்த ஒரு பெண்மணி அஜிதா, தூத்துக்குடி மாவட்டம். கார் வருது சார், உங்க கட்சி பெண்மணி தானே அவங்க நிக்கிறாங்க, காரை ஏத்திக்கிட்டே இருக்காங்க சார். கொஞ்சம் விட்டா அந்தப் பெண்மணி மேல காரை ஏத்திருப்பாங்க. இறங்கி ஒரு வார்த்தை ஏம்மா என்ன பிரச்சனைன்னு பேசல, இவர் உள்ள போயிட்டாரு. இவங்க பொதுச்செயலாளர் புறவாசல் வழியா எகிறி புடிச்சு ஓடுறாரு கார்ல.

ஒருவேளை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்குனராக இல்லாமல் இருந்திருந்தால், திரு விஜய் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைச்சிருக்குமா? எஸ்.ஏ. சந்திரசேகர் அறிமுகப்படுத்தி இருந்தாலும் விஜய் என்ற நடிகர் மக்களால் கொண்டாடப்படுவதற்கு அவருடைய திறமை காரணம், ஐ அக்ரி வித் தட். ஆனா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அரை நூற்றாண்டு கால உழைப்பு அவரை அங்க நிப்பாட்டி இருக்குது.

விஜய் பின்னால் இருக்கக்கூடிய ஜென்சி தலைமுறை விஜய்க்கு மட்டும் ஆபத்தல்ல, தமிழ்நாட்டிற்கே ஆபத்து. மத்த கட்சி்ல இருக்கக்கூடிய எந்த ஜென்சி தலைமுறையும் போய் தியேட்டர்ல தியேட்டர் அடிச்சு உடைக்கிறது இல்லை. மாநாடு போட்டா சேர அடிச்சு உடைக்கிறது இல்லை. எக்ஸாம் முக்கியம் இல்ல, நான் விஜயை பார்க்க வந்திருக்கிறேன்னு ஒரு தம்பி பேசுறான். நீங்க அரசியல் பேசுங்க, திமுகவை விமர்சிங்க, தப்புல்ல. முதலில் அந்தத் தலைமுறையை அரசியல் மயப்படுத்துங்கள்." என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com