அடிக்கடி இடம் மாறும் பாகுபலி... தேடுதல் வேட்டையில் 7 குழுக்கள்...

பாகுபலி யானை தேடுதல் வேட்டையில் 7 குழுக்கள் அமைப்பு
அடிக்கடி இடம் மாறும் பாகுபலி... தேடுதல் வேட்டையில் 7 குழுக்கள்...
Published on
Updated on
1 min read
பாகுபலி யானை வழக்கமாக இருக்ககூடிய வனப்பகுதியிலிருந்து விலகி சென்றதால் காலர் ஐ.டி.பொருத்துவதற்காக  7 குழுக்கள்  அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய வனச்சரக பகுதிகளில் உள்ள குடியிருப்பு, விளை நிலங்களில் இரவு நேரங்களில் பாகுபலி யானை உலா வருகிறது. இதற்கு ரேடியோ காலர் பொறுத்த கலீம், மாரியப்பன்,வெங்கடேஷ் ஆகிய 3 கும்கியானைகள் மேட்டுப்பாளையத்திற்கு வந்திருந்தன.
இந்நிலையில்  ஒடந்துறை வனப்பகுதியில் நடமாடி வந்த பாகுபலி யானை தற்போது இடம் மாறியுள்ளது. இதனால் பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொறுத்தும் பணியை தொடரா முடியவில்லை. இதையடுத்து 42 பேர் கொண்ட 7 குழுக்கள் யானையை தீவிரமாக தேடி வருகின்றனர்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com