நிழல் இல்லா நாள் இன்று! தென் சென்னையில் காணலாம்...

நிழல் இல்லா நாளான இன்று சென்னையில் 12.13 மணிக்கு பூமியில் நிழல் தெரியாத அதிசயம் நிகழ்ந்தது.
நிழல் இல்லா நாள் இன்று!  தென் சென்னையில் காணலாம்...
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் நிழல் இல்லா நாட்கள் வருடத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும். சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலம், கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் நடுவில் சூரியனின் வட திசைப் பயணத்தில் ஒரு நாளும் தென் திசைப் பயணத்தில் ஒரு நாளும் உங்களின் உச்சந் தலைக்கு மேலே சரியாக செல்லும், இந்த இரண்டு நாட்களில் ஒரு செங்குத்து கம்பியின் நிழல் அதன் கீழேயே குறுகி விழும் நிகழ்வு சென்னையில் இன்று பிற்பகல் 12.13 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வு குறித்த செயல் விளக்கம் சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் ( பிர்லா கோளரங்கம்) நடைபெற்றது. 

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய அறிவியல் பலகையின் இயக்குனர் வெங்கடேஷ்; ஆண்டுதோறும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நிழல் இல்லா நாள் தோன்றும் என்றும் இன்று சரியாக 12.13 மணியளவில் சென்னையில் நிழல் இல்லா நாள் ஏற்படும்.இதேபோல் வேலூர், ஓசூர் போன்ற பகுதிகளிலும் நிழல் இல்லா நிகழ்வு இன்று நடைபெறும். இன்று துவங்கும் நிழல் இல்லா நாள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து தோன்றும் நாளை திருப்போருர் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் தோன்றும்.  இறுதியாக செப்டம்பர் 1 ஆம் தேதி கன்னியாகுமரியில் தோன்றி நிறைவடையும் என அவர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com