ரவுடிகளால் சுடப்பட்ட காவலர்களை சந்தித்த சங்கர் ஜிவால்!!

Published on
Updated on
1 min read

ரவுடிகளால் சுடபட்டு காயமடைந்த காவலர்களை  தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால்  நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த  காவலர்கள் ராஜேஷ் , கிருஷ்ணமூர்த்தி, லிவி பிரபு ஆகிய மூன்று காவலர்கள் படுகாயமடைந்தனர். 

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும்  மூன்று காவலர்களையும் காவல் துறை இயக்குநர் சங்கர் ஜிவால் ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஆகியோர் பார்வையிட்டு அவர்களிடம் நலம் விசாரித்தனர்.

இதன் பிறகு  செய்தியளார்களை சந்தித்த ஆவடி காவல் ஆணையர் சங்கர், ரவுடிகள் இருவரும் இரண்டு துப்பாக்கிகளால் சுட்டதாகவும் அவர்களுக்கு துப்பாக்கிகள் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் கூறினார். ஆவடி மாநகர காவல் எல்லையில் ரவுடியிசம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com