குலோப் ஜாமூன் சர்ச்சை...எழுத்துப்பூர்வ விளக்கமளிக்க சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு உத்தரவு!

குலோப் ஜாமூன் சர்ச்சை...எழுத்துப்பூர்வ விளக்கமளிக்க சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு உத்தரவு!
Published on
Updated on
1 min read

சர்ச்சைக்குரிய வகையில் மருத்துவக் கருத்துக்களை வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஷர்மிகாவுக்கு உத்தரவு :

சமூக வலைதளங்கள் மூலம் குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும், குப்புறப் படுத்தால் மார்பகப் புற்று நோய்  வரும் உள்ளிட்ட சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டது குறித்து விளக்கமளிக்க  இந்திய மருத்துவ இயக்குனரகம் மற்றும் ஓமியோபதி வாரியம் சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு உத்தரவிட்டது.

அதனடிப்படையில், சென்னை அரும்பாக்கத்திலுள்ள சித்த மருத்துவ இயக்குனர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சித்த மருத்துவர் ஷர்மிகா விளக்கமளித்தார். சுமார் ஒருமணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

எழுத்துப்பூர்வ விளக்கம் :

விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் கணேஷ், சித்த மருத்துவர் ஷர்மிகா மீதான புகார்களின் விளக்கத்தை, வரும் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். ஆகவே, எதுவா இருந்தாலும் எழுத்துப்பூர்வமாக கொடுத்த பின்னர் தான் முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com