தமிழ்நாடு
பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா, மாரடைப்பு காரணமாக டேராடூன் மருத்துவமனையில் அனுமதி...
பாலியல் புகாரில் சிக்கிய கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, மாரடைப்பு காரணமாக டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து, அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.
இதுகுறித்து விசாரிக்க சிவசங்கர் பாபாவுக்கு, மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் இன்று அவருக்கு பதிலாக ஜானகி என்பவர் ஆஜராகியுள்ளார். கடந்த 9-ம் தேதி சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி, அதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்தை ஜானகி வழங்கியுள்ளார். இதைப்போல வழக்கறிஞர் நாகராஜன், பள்ளி தாளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.