
2014 ஆம் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியின் முதல் வெற்றிக்கு காரணம் பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோரின் வியூக வகுப்பு நிறுவனமான ஐ-பேக் பின்னணியில் இருந்தது. அதனை தொடர்ந்து நடந்த பல்வேறு மாநிலங்களில் நடந்த தேர்தலில் பல்வேறு வியூகம் வகுக்க நிறுவனங்கள் கட்சிகளின் பின்னணியில் பணியாற்று வருகின்றனர்.தமிழக அரசியல் களமும் இதற்கு விதிவிலக்கு இல்லை.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு கட்சிகள் பல்வேறு பணிகளை தொடங்கி முடுக்கி விட்டு உள்ளனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியல் களத்தில் கோலோச்சி வரும் திராவிட கட்சிகள் தேர்தலில் பணியாற்ற வியூகம் வகுப்பு நிறுவனங்களை தேர்வு செய்யும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.இரண்டு திராவிட கட்சிகளுடன் பணியாற்ற பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் மற்றும் ராபின் ஷர்மாவின் ஷோடைம் ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
ராபின் ஷர்மாவின் ஷோ டைம் நிறுவனம் 2024 மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலின் போது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சிக்கு பணியாற்றி உள்ளார். இதில் குறிப்பிட்டு பாஜகவின் சித்தாந்தத்தை கூட்டணி கட்சிகள் உடன் அதிக அளவில் ஷோ டைம் பணியாற்றி இருக்கிறது. பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் ஜெகன்மோகன் ரெட்டி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ் , ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுக்கு வியூக வகுப்பாளராக பணியாற்றி இருக்கின்றனர்.
2026 தேர்தலுக்கு திமுகவின் பென் நிறுவனத்துடன் இணைந்து ஷோ டைம் நிறுவனம் பணியாற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் வியூகங்களை வகுத்து தந்த ஷோ டைம் நிறுவனம் தற்போது திமுக உடன் இணைவது குறித்து பலரும் முணுமுணுக்க தொடங்கி இருக்கிறார்கள். பாஜகவின் நேரடி சித்தாந்த்த எதிரியை திமுக எதிர்த்து வரும் நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு வேலை செய்த நிறுவனத்தை அழைத்து வருவது சரியாக இருக்குமா என கேள்விகள் எழுந்துள்ளது.