

சாத்தூர் எஸ்.ஐ மனைவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை-விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தவரின் உறவினர்கள் திடீர் சாலை மறியல்- மறியலில் ஈடுபட்டவர்கள் கைது
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் அருண்(28) இவர் சாத்தூர் நகர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த இளவரசியை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 2-வயதில் அனன்யா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
சாத்தூர் பாரதி நகரில் வாடகை வீட்டில் எஸ்.ஐ அருண், மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அருண் நேற்று ஆளுநர் நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்பொழுது அவரது செல்போனில் மனைவி இளவரசியின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் “குழந்தையை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளவும், நன்றாக படிக்க வைக்கவும்… நான் செல்கிறேன்” என்று பதிவிட்டதை பார்த்து பதற்றமான அருண் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
உடனடியாக கதவை உடைத்து திறந்து பார்த்த போது அருண் மனைவி சேலையால் தூக்கிட்டு தொங்கியபடி இருந்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் உதவியுடன் இளவரசி உடலை கீழே இறக்கி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் சார்பு ஆய்வாளர் அருணின் மனைவி இளவரசி உயிரிழப்பிற்கான காரணம் குறித்து, வழக்குப் பதிவு செய்து சாத்தூர் நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உயிரிழந்த இளவரசியின் உறவினர்கள் பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மனைவியை எஸ்.ஐ அருண் கொலை செய்துள்ளதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் எனக்கோரி மருத்துவமனை நுழைவு வாயில் முன்பாக திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீஸார், வருவாய்த் துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் பேச்சுவார்த்தை உடன்படாத தொடர்ந்து உறவினர்கள் தொடர் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.