களத்தில் இறங்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை... மாநிலம் முழுவதும் தொடங்கிய ரோந்து பணிகள்!

சிங்கப்பெண் போலீசாரை அழைத்தால், மின்னல் வேகத்தில் உதவிக்காக வந்து சேருவோம் என்றும் மாணவிகளுக்கு நம்பிக்கை அளித்தனர்...
களத்தில் இறங்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை... மாநிலம் முழுவதும் தொடங்கிய ரோந்து பணிகள்!
Admin
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்துள்ள "சிங்கப்பெண்" சிறப்பு அதிரடிப்படை திட்டம் மாநிலம் முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகளிடையே மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

திருவண்ணாமலை 

திருவண்ணாமலை மாநகராட்சி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பெண் குழுவினர் மாணவிகளிடம் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் வழிமுறைகள் மற்றும் "குட் டச் – பேட் டச்" குறித்த முக்கிய விழிப்புணர்வுகளை எடுத்துரைத்தனர். மேலும், குழந்தைகள் மற்றும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், தொந்தரவுகள் அல்லது ஆபத்துகள் குறித்து 1098 குழந்தைகள் உதவி எண்ணை தொடர்புகொண்டு உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தினர். மேலும் சிங்கப்பெண் போலீசாரை அழைத்தால், மின்னல் வேகத்தில் உதவிக்காக வந்து சேருவோம் என்றும் மாணவிகளுக்கு நம்பிக்கை அளித்தனர்.

Admin

கடலூர் 

அதேபோல் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ் இனியன் பெண் பிள்ளைகள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள், இணையதள குற்றங்கள், சமூக வலைதள பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் சுய பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினார். மேலும் மாணவிகளுக்கு உதவி ஆய்வாளர் லிடியாசெல்வி எந்த சூழ்நிலையிலும் அச்சப்படாமல் தங்களது பிரச்சனைகளை பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தனர்.

Admin

நாகப்பட்டினம் 

நாகப்பட்டினம் புதிய பேசிருந்து நிலையத்தி ரோலாந்து பணியில் ஈடுப்பட்ட சிங்கப்பேன் சிறப்பு அதிரடி படையினர் பேருந்து நிலையத்திற்கு வரும் பெண் பயணிகள், கல்லூரி மாணவிகள் ஆகியோருக்கு ஏதேனும் அச்சுறுத்தலோ அல்லது ஈவ்-டீசிங் (Eve-teasing) போன்ற தொல்லைகளோ ஏற்பட்டால், உடனடியாக இந்த சிங்கப்பெண் போலீசாரை அணுக வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் இதற்காக பிரத்யேக சைரன் மற்றும் நவீன வசதிகள் கொண்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பெண் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் புதிய பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் தனியாக வரும் பெண்களுக்கு இந்த சிங்கப்பெண் ரோந்து பணி பெரும் மன தைரியத்தையும், பாதுகாப்பையும் தரும் வகையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் தடுக்கும் நோக்கில் தொடங்க பட்டுள்ளதாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Admin

சிங்கப்பெண் திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மாணவிகளிடையே தன்னம்பிக்கை, விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு உணர்வு அதிகரித்துள்ளதாக கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com