உங்கள் கையில் 500 ரூபாய் இருந்தால் கூட, அதை சேமித்து கணிசமான தொகையை ஈட்டிவிட முடியும். ஸ்டாக் மார்க்கெட், அதில் செய்யப்படும் இன்வெஸ்ட்மென்ட் என்று பல விஷயங்கள், மெத்த படித்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று கையில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தாலே போதும், இன்வெஸ்ட்மென்ட் செயலிகள் மூலம் நம்மால் சேமிப்பை துவங்க முடியும்.
இளைஞர்கள் பலரும் ஆர்வத்தோடு இப்போது முதலீடுகள் பற்றி தெரிந்துகொள்ள துவங்கியுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை, கடந்த 10 ஆண்டுகளில் ஸ்டாக் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் செலுத்தும் நபர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
ரிஸ்க் அதிகம் உள்ள ஒரு இடம் ஸ்டாக் மார்க்கெட் என்பது அனைவருக்கும் தெரியும். என்றாலும், பொறுமையாக, கவனமாக, பங்குச்சந்தையின் வளைவு நெளிவுகளை தெரிந்து முதலீடு செய்த பலரும் இன்று பெரும் பணக்காரர்களாக உள்ளனர் என்பது மறுக்கவே முடியாத உண்மை.
SIP Vs LUMPSUMP
SIP என்பது எளிமையான ஒரு சேமிப்பு முறை, பல வருடங்களுக்கு, மாதம்தோன்றும் சிறுக சிறுக சேமித்தால் நம்மால் சிறந்த லாபத்தை பார்க்கமுடியும். ஆனால் மாதம் தோறும் ஒரு கணிசமான தொகையை சேமிப்பது என்பது எல்லாராலும் முடியாத ஒரு காரியம். மாதம்தோறும் ஈட்டும் பணமே குறைவு தான் என்பதால், அது குடும்ப செலவுக்கு தான் சரிவரும். அதை மீறி அதில் ஒரு தொகையை சேமிக்க வேண்டும் என்பது ஒரு சிலருக்கு சிரமமான ஒன்று தான்.
சரி மாதம்தோறும் சிறுக சிறுக சேமிக்காமல், ஒரே ஒரு முறை LUMPSUM என்ற முறையில் முதலீடு பெரிய லாபம் அடைய முடியுமா? என்று கேட்டல் நிச்சயம் முடியும் என்பது தான் பதில்.
LUMPSUMP
Lumpsum பற்றி தெரிந்துகொள்ளும் முன்பே, அது அதிக ரிஸ்க் உள்ள ஒரு இன்வெஸ்ட்மென்ட் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
SIP என்பது ஒரு குறிப்பிட்ட அல்லது பல்வேறு பங்குகளில் சிறுக சிறுக, மாதாமாதம் சேமிப்பது. ஆனால் LUMPSUM என்பது 50,000 அல்லது 1,00,000 போன்ற பெரிய தொகையை ஒரே பங்கில், அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பங்குகளில் சேமிப்பது தான்.
இப்படி செய்வதால் என்ன பயன்?
நீங்கள் உங்களிடம் கிடைக்கும் ஒரு பெரும் தொகையை LUMPSUM மூலம் முதலீடு செய்யலாம். ஒரு முறை நீங்கள் முதலீடு செய்துவிட்டு குறைந்தது 25 ஆண்டுகள் அதை அப்படியே விடும்பட்சத்தில், உங்கள் ஓய்வு காலத்தில் பெரும் லாபம் பெறமுடியும்.
உதாரணம்
உங்களுக்கு வயது 30 என்று வைத்துக்கொள்வோம், ஒரு நல்ல பங்கில், நீங்கள் 1 லட்சம் ரூபாயை LUMPSUM மூலம் முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் அதை பற்றி கவலைப்பட தேவையில்லை. சுமார் 28 முதல் 30 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் போட்ட அந்த 1 லட்சம், 13.5 வருவாய் விகிதத்துடன் உங்களுக்கு சுமார் 45 லட்சத்திற்கும் மேலான லாபமாக கிடைக்கும்.
ரிஸ்க் இருக்குமா?
கண்டிப்பாக ரிஸ்க் உள்ள ஒரு முதலீடு தான் இது. ஸ்டாக் மார்க்கெட் என்று வந்துவிட்டாலே ரிஸ்க் என்பது நிச்சயம். அதிலும் LUMPSUM கொஞ்சம் அதிக ரிஸ்க் உள்ள சேமிப்பு முறை தான். ஆனால் ரிஸ்க் எடுக்க நீங்கள் தயாராக இருந்தால், ஸ்டாக் மார்க்கெட்டில் அதிக அனுபவம் இருந்தால் நிச்சயம் LUMPSUM உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்