இதெல்லாம் ஒரு ஜாலியா..!? “நாய்களின் கழுத்தை கேபிளால் இறுக்கி…” சிறுவர்களின் செயலால் அதிர்ச்சி!!

6 சிறுவர்களில் ஒருவர் தனது தாயார் வளர்த்த நாயையும் இதேபோன்று ...
dogs
dogs
Published on
Updated on
1 min read

“குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்பர் ஆனால் சமீப காலமாக 18 வயதுக்கு குறைவானோரே மிக மோசமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

எதோ விளையாட்டு புத்தியில் தெரியாமல் செய்கிறார்கள் என சொல்லும் அளவுக்கு சிறு தவறுகளாக கூட இருப்பதில்லை. அப்படி நெஞ்சை உறைய வைக்கும் ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

குழந்தைகள் மதுரை மாநகர் ஆரப்பாளையம் கண்மாய்கரை பகுதியில் நேற்றிரவு 3 தெரு நாய்கள் மர்மமான முறையில் கழுத்தில் கேபிளுடன் இறந்து கிடந்துள்ளன. ஒரே இரவில் நாய்கள் அடுத்தடுத்து இறந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் சிசிடிவி  கேமராக்களின் பதிவுகளை பார்த்துள்ளனர். 

அதில் 6 சிறுவர்கள் கேபிள் டிவி வயரால் துாங்கிக்கொண்டிருந்த நாய்களின் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளது  தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த பகுதி மக்கள் சிறுவர்களை தேடிப்பிடித்து விசாரித்தபோது “நாய்களை ஜாலிக்காக கழுத்தில் இறுக்கினோம்” என கூறியுள்ளனர். 6 சிறுவர்களில் ஒருவர் தனது  தாயார் வளர்த்த நாயையும் இதேபோன்று கழுத்தை இறுக்கி உயிரிழக்க செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனையறிந்த ப்ளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாணவர்கள் செயல்பாடுகள் குறித்து கரிமேடு  காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

ஜாலிக்காக நாயின் கழுத்தை இறுக்கி உயிரிழக்க செய்யும்  மாணவர்களின் மனநிலை பதற்றமடைய வைத்துள்ளதாக விலங்குகள் நல ஆர்வலர்களும் பெற்றோர்களும் கவலையடைந்துள்ளனர்.

இதுபோன்ற மனநிலையில் உள்ள சிறுவர்களை  அழைத்து அவர்களுக்கு பெற்றோர்களின் அனுமதியுடன் மனநல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுவர்கள் நாய்களை கழுத்தை இறுக்கி உயிரிழக்கவைத்த சம்பவத்தில் பிண்ணனியில் யாருடைய தூண்டுதலும் உண்டா? என்ற அடிப்படையிலும் விசாரணை நடத்தவுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com