வனவிலங்குகளுக்கு ஸ்கெட்ச்... தீவிர சோதனையில் சிக்கிய நாட்டுத் துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள்.. 3 பேர் கைது!!

சேலம் அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த மூன்று நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள், இதுதொடர்பாக மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வனவிலங்குகளுக்கு ஸ்கெட்ச்... தீவிர சோதனையில் சிக்கிய நாட்டுத் துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள்.. 3 பேர் கைது!!
Published on
Updated on
1 min read

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள டேனிஸ்பேட்டை வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சிலர் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிப் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் சேலம் மாவட்ட வனத்துறையின் தனிப்படையினர் அப்பகுதியில் இன்று அதிகாலை தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது டேனிஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், முருகன் மற்றும் புஷ்பராஜ் ஆகியோரது வீட்டில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 3 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள், வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய வலைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com