
கடந்த சில மாதங்களாகவே பாமக -விற்குள் தந்தை மகன் கோஷ்டி மோதல் வலுத்து வருகிறது. இளைஞர் அணி தலைவரகாக் ராமதாஸின் பேரன் முகுந்தன் நியமனதி எதிர்த்து அன்புமணியோடு தொடர்ந்து ராமதாஸ் சண்டையிட்டு வந்தார். இந்த பூசல் சமையங்களில் வெளிப்படையாகவே நடந்ததது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தைலாபுரத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பாமக நிர்வாகிகள் 20-பேர் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த விவகாரம் பெரும்பான்மையான கட்சித்தொண்டர்கள் அன்புமணியின் வசம் இருப்பதையே காண்பித்தது.
தற்போது திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றார்.அப்போது பேசிய ராமதாஸ் “கடந்த சில தினங்களுக்கு முன்பாக தர்மபுரியில் பேசிய டாக்டர் அன்புமணி ராமதாஸ் நான் என்ன தவறு செய்தேன்? என்று கேட்டிருந்தார் அதற்கான பதிலை நான் சொல்ல வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது எனது சக்தியை மீறி 35 வயதில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களை மத்திய மந்திரி ஆக ஆக்கியது எனது முதல் தவறு” என பேசினார்.
நாகரீகமற்ற செயல்!
புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நான் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு உதவியாக முகுந்தன் வன்னியர் சங்க மாநில செயலாளராக செயல்படுவாய் என நான் அறிவித்த பொழுது அதற்கு மேடை நாகரீகம் அல்லாமல் மேடையிலேயே மறுப்பு தெரிவித்ததும், மேடையில் எனது முன்பாக கால்களை ஆட்டிக் கொண்டு பேசியதும் ,மைக்கை எனது தலையில் அடிப்பது போன்று வைத்ததும் சரியா? கடமை கண்ணியம் கட்டுப்பாடு என அண்ணாவின் வார்த்தைக்கு இணங்கி செயல்படாமல் எனது சரியான வளர்ப்பை மீறி டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடந்து கொண்டார்.பொதுக்குழுவில் என்ன நடந்தது என எல்லோருக்கும் தெரியும். மேடை நாகரீகம், சமூக நாகரிகம் என எதையும் பார்க்காமல் பொது மேடையில் அநாகரீகமாக நடந்து கொண்டது யார்?என டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
திசைதிருப்பும் முயற்சி!
தொடர்ந்து பேசிய ராமதாஸ் “தருமபுரி கூட்டத்தில் அன்புமணி பேசியதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். நானும் பார்த்தேன். நாடும் பார்த்தது. நான் என்ன குற்றம் செய்தேன் ஏன் எனக்கு இந்த பதவி மாற்றம் என சொல்லி இருக்கிறார். இது முழுக்க மக்களையும், கட்சியினரையும் திசை திருப்பும் முயற்சியாகும். தான் செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும், கட்சிக்காரர்களிடமும் அனுதாபம் பெற முயற்சிக்கிறார். அதற்கான பதிலை சொல்வது எனது கடமையாகும்.
இனிப்பை தவிர்த்து கசப்பான வார்த்தைகளை கொண்ட மருந்தை தான் பதிலாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அன்புமணி தான் தவறு செய்தவர். தவறான ஆட்டத்தை தொடங்கி முதுகில் அடித்தவர் அன்புமணி தான். என்ன நடந்தது என ஆதாரத்தோடு ஒளிவு மறைவின்றி இப்போது அப்படியே வெளிப்படுத்துகிறேன்.
அம்மாவை தாக்கினார்!
“வீட்டில் எனக்கு உதவியாகவும், கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் இருக்க தான் இதே செயல் தான் முகுந்தனி நியமித்தேன்.உங்கள் தாயை நீங்கள் கடவுள் என சொல்வீர்கள். பொங்கல் சமயத்தில் முகுந்தன் நியமனம் குறித்து அவரது தாய் என்னிடம் கேட்டார். அப்படி கேட்டதும், ஒரு பொருளை தூக்கி தன் அம்மா மீது அடித்தார் அன்புமணி. நல்ல வேளையாக அது அவர் மீது படவில்லை. இது எல்லாம் ஒரு சேம்பிளாக தான் கூறுகிறேன். அவர் நிறைய தவறுகளை செய்து இருக்கிறார்”
காடுவெட்டி குருவை கீழ் தரமாக நடத்திய விதம் ஏற்று கொள்ள முடியாது. இதை எல்லாம் பார்த்த நான் நிர்வாக குழு கூட்டதிலேயே தலைமை பண்பு உனக்கு இல்லை என அன்புமணியிடம் நேரடியாக நான் சொன்னேன்.
காலைப்பிடித்து அழுதனர்!
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி பதவியேற்ப பின் போது , நான் இந்த கட்சியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் என்னிடம் கேட்டார்.நடந்து முடிந்த தேர்தலில அதிமுகவுடன் கூட்டணி வைக்கவும், எடப்பாடி பழனிசாமியிடம் அன்புமணி பேசியதன் அடிப்படையில் சிவி சண்முகத்திடமும் பேசப்பட்டது. ஆனால் பிஜேபியிடம் கூட்டணி வைக்க நிர்பந்தம் செய்தார். அன்புமணியும் அவரது மனைவியும் என்னிடம் அழுதார்கள்.அப்பொழுது இந்தக் கூட்டணியை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் நான் இறந்துவிடுவேன் என்று கூறினார்.
இதனால் தேர்தலில் தோல்வி அடைந்ததுடன், கட்சி அங்கீகாரத்தை இழந்தோம். என அவர் பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்