தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் நிகழ்ந்த சிறப்பு வழிபாடுகள்...!

தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் நிகழ்ந்த சிறப்பு வழிபாடுகள்...!
Published on
Updated on
1 min read

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நிகழ்ந்தது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சின்ன காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அமராவதி ஆற்றில் இருந்து புனித நீரை கரகாட்டத்துடன் பக்தர்கள் எடுத்து வந்தனர். பூஜைகள் செய்யப்பட்ட பின் கோவை கலை வள்ளிகும்மி ஆட்ட கலைஞர்களின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கும்மியாட்டக் கலைஞர்கள் கும்மி அடித்து ஆடியதை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா பூ அலங்கார மண்டகப்படி வழிபாட்டுடன் தொடங்கியது. வண்ணப்பொடிகள் மற்றும் பூக்களால் வரையப்பட்ட சாமி உருவங்களை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பார்வையிட்டு தரிசனம் செய்தனர்.

மஹா சிவராத்திரி விழாவையொட்டி புதுச்சேரி சித்தானந்தா கோயிலில் தொடங்கிய நாட்டியாஞ்சலி விழாவில் மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகள், பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த நாட்டியக்கலைஞர்கள் பங்கேற்று பரதம், குச்சிப்புடி, கதக் உள்ளிட்ட பல்வேறு நடனங்களை ஆடி கலைஞர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்

அதேபோன்று, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் சிவராத்திரி உற்சவத்தின் ஆறாவது நாளான நேற்று சுவாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் நான்கு ரத வீதி வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com