அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி...

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.
அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி...
Published on
Updated on
1 min read

மயிலாடுதுறை | தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மயிலாடுதுறை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே சாய் விளையாட்டு அரங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கைப்பந்து போட்டி, இறகு பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

முன்னதாக தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு இடையே நடைபெற்ற கைப்பந்து போட்டியினை மாவட்ட எஸ்பி நிஷா தொடங்கி வைத்தார். விறுவிறுப்பாக நடைபெறும் போட்டிகளின் இறுதிச்சுற்றில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com