"தமிழகத்தில் கல்வி முன்னேறி இருக்கிறது" - கனிமொழி

"தமிழ்நாட்டை எலக்காரமாக நினைப்பதும், தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் வாக்களிக்க மாட்டார்கள் என்ற காரணத்தினால் மட்டுமே மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது"- கனிமொழி பேட்டி "திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எந்நாளும் தொடர்ந்தால் தான் தமிழக மக்களும்,திராவிட முன்னேற்றக் கழகமும் மகிழ்ச்சியாக இருக்கும்" - அமைச்சர் சேகர்பாபு
kanimozhi press meet
kanimozhi press meetAdmin
Published on
Updated on
2 min read

தமிழக முதலமைச்சர் அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனிதநேய விழா-2025 கொண்டாடப்பட்டு வருகிறது..

அதன் ஒரு பகுதியாக, சென்னை கிழக்கு மாவட்ட திமுக

மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுதாதீனதயாளன் தலைமையில் மகளிர் அணியின் 500 நிர்வாகிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் கழக துணைப் பொது செயலாளருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக தமிழ் மொழியையும் விடமாட்டோம் தமிழையும் விடமாட்டோம் தமிழ்நாட்டையும் விடமாட்டோம் என்ற உறுதி மொழி ஏற்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் வெற்றிஅழகன் மற்றும் பகுதி மகளிரணி அமைப்பார்கள், நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்..

நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் கழக துணைப் பொது செயலாளருமான கனிமொழி கருணாநிதி ;

தமிழ்நாட்டில் உரிமைகளை பாதுகாக்க வேண்டும், அதேபோன்று நமது மொழியை பாதுகாக்க வேண்டும் நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் இதுவே தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் செய்தியாக இருக்கிறது...

தேர்தல் வரும் காரணத்தினால் மாநில உரிமையை பற்றி பேசுகிறார்களா என்று கேட்கிறார்கள்? அவர்களுக்கு மறுபடியும் சொல்லும் ஒரே பதில் சட்டமன்றத் தேர்தல் நிச்சயம் திமுக வெற்றி பெற்று தமிழகத்திற்கு தொடர்ந்து மக்கள் பணி செய்யும்..

பாஜக ஒன்றும் கிடையாது தமிழ்நாட்டில் மலரவே மலராது..

நாங்கள் மக்களிடம் உங்களைப் பற்றி பேசி உங்களுக்கு முக்கியத்துவம் தரும் அளவிற்கு எந்த அவசியமும் கிடையாது.

தமிழ்நாட்டின் உரிமைகளைப் பற்றி தற்போது பேசுகிறோம் என்றால் அதற்கான கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டு இருக்கிறோம்.

நாங்களாக சண்டைக்கு போகவில்லை ஆனால் வந்த சண்டையை விட மாட்டோம்....

நீங்களாக தான் வருகிறீர்கள் சண்டைக்கு...

மிக முக்கியமான பிரச்சினை மும்மொழிக் கொள்கை...

தமிழ் ஆங்கிலம் இரு மொழிக் கொள்கை இருக்கிறது தேவை என்றால் அவர்கள் மூன்றாவதாக ஒரு மொழியை படிக்கட்டும்... ஆனால் மூன்றாவதாக ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பது தான் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்கிறோம்.

தமிழ்நாட்டு மக்கள் ரத்தத்தை வியர்வையும் சிந்தி தந்திருக்கக் கூடிய பணத்தை தங்களின் பிள்ளைகளுக்கு கல்விக்கு கொடுக்க மாட்டேன் என்று சொல்வது அந்த மிரட்டலை நோக்கி வைக்கிறீர்கள்.பிளாக் மெயில் பண்ணுவது நாங்கள் இல்லை நீங்கள் தான்...

அண்ணா மற்றும் கலைஞரின் பிள்ளைகள் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம்.

நான் இத்தனை வருடமாக இருக்கிறேன் எனக்கு ஹிந்தி தெரியாது எனக்கு கற்க வேண்டிய அவசியமில்லை..

மக்களுடன் பணியாற்றக்கூடிய நேரம் வரும்போது அவர்கள் தேவையான மொழிகளை கற்றுக் கொள்வார்கள்....

தமிழகத்தில் கல்வி முன்னேறி இருக்கிறது வெவ்வேறு இடங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள்..

நாம் யார் என்பதை தெரிந்து கொள்வதற்கு தமிழை புரிந்து கொள்ள வேண்டும்...

பத்தாயிரம் கோடி கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தங்கள் பிள்ளைகள் உங்களுக்கு என்றும் அடிமையாக இருக்க மாட்டார்கள்...

உத்திரபிரதேசத்திற்கு இரண்டு மூன்று மடங்கு அதிகமாக பணம் கொடுக்கிறார்கள்...

நமது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்...

சேகர் பாபு மேடை பேச்சு,

தமிழகத்திற்கு உண்டான உரிமையை தொடர்ந்து பெற போராடி கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சருக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்.

தமிழகத்தின் உரிமையான நாடாளுமன்றத்தின் பின்னர்களின் எண்ணிக்கையை குறைப்பது, இருமொழிக் கொள்கை இரண்டையும் மீட்டெடுப்பது என்னுடைய முழு கடமை என்று தன்னுடைய பிறந்தநாள் செய்தியாக வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கரத்தை என்றும் வளப்படுத்துவோம்..

2026 ஆம் ஆண்டு அமைய இருக்கின்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களின் தலைமையில் அமைகின்ற ஆட்சியில் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தில் உள்ள ஆறு தொகுதியிலும் வென்று காட்டுவோம் என்று ஒரு நிகழ்வு நடைபெறும்..

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எந்நாளும் தொடர்ந்தால் தான் தமிழக மக்களும்,திராவிட முன்னேற்றக் கழகமும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி

கழகத்தின் தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் பிறந்தநாளை ஒட்டி நடைபெறும் நல திட்ட நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

முதலில் ரயில்வே துறைகளில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் விபத்துகளையும் சேதங்களையும் தடுத்தாலே மக்களின் பாதிப்புகள் குறையும் அதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும்..

மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை தர மாட்டோம் என்று அதிகாரத்தோடு சொல்லி வருகிறார்கள் அவர்கள் தான் பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்..

தமிழ்நாட்டை எலக்காரமாக நினைப்பதும் தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற காரணத்தினால் மட்டுமே இது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள் மொழிப் போராட்டத்தின் வரலாறு என்பது நீண்டகால போராட்டமாக தொடர்கிறது நிச்சயம் இதுபோன்ற மொழிக்காக மொழி நலனுக்காக யார் வேண்டுமானாலும் குரல் கொடுக்கலாம்.. மொழி போராட்டத்திற்காகவும் மொழி உரிமைக்காகவும் ஏராளமானோர் உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை மறந்திட கூடாது...

சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துப் பேசிய கனிமொழி கருணாநிதி, இதைவிட பெரியாரை கேவலப்படுத்த முடியாது... அதனால் இதற்கு பதில் சொல்லும் அளவிற்கு தகுதி வாய்ந்த விஷயமே இல்லை.

அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்களை இதைப்பற்றி கேட்க வேண்டும் கட்சியில் இருக்கக்கூடிய பெண்களும் இதைக் கேட்க வேண்டும் இதைவிட கேவலமாக பெண்களை பேசக்கூடியது எப்படி சகித்துக் கொண்டு இதையெல்லாம் கேட்டுக் கொண்டு அந்த கட்சியில் இருக்கிறார்கள் என தெரியவில்லை என்று சீமானை சுட்டிக்காட்டினார்..

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com