
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால தொடரில் பேசிய நிர்மலா சீதாராமன், 1989-ல் தமிழ் நாட்டு சட்டப்பேரவையில் வைத்து ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு தற்பொழுது தமிழ் நாட்டு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரபல நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள முதலமைச்சர், 1989-ல் சட்டப்பேரவையில், ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். அவர் அவ்வாறு கூறியது கண்டனத்திற்குரியது, என தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டமன்ற நிகழ்வுகளை பொய்யாக திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை, ஜெயலலிதா அப்பொழுது நாடகமாடினார்" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க || செல்போனில் மூழ்கிய மனைவி... ஆத்திரத்தில் கணவன் வெறிச் செயல்!!