கரூரில் நடந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது, விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைக 17 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 34 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானோர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் என் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உயிரிழந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் உட்பட பல தலைவர்கள் நாடு முழுவதிலிருந்தும், பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். விஜயின் பரப்புரைக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என அனுமதி கேட்டிருந்த நிலையில் 27 ஆயிரம் பேர் வந்திருந்ததாக தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கரூர் துயரம் குறித்து தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்
“தவெகவினர் முதலில் கரூர் லைட்ஹவுஸ் ரவுண்டானா, உழவர் சந்தை ஆகிய இடங்களில் அனுமதி கேட்டனர், கூட்டம் அதிகம் கூடும் என்பதால், அங்கு அனுமதி மறுக்கப்பட்டு வேலுச்சாமிபுரம் பகுதியில் பரப்புரைக்கு அனுமதி பரப்புரைக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில், 27 ஆயிரம் பேர் பங்கேற்றனர்”, என டிஜிபி குறிப்பிட்டுள்ளார். துயரச் சம்பவத்தை அறிந்ததும் உடனடியாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் ஆலோசனை நடத்தி 2,000 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.