ஆளுநரை சந்திக்கும் பாஜக மாநில நிர்வாகிகள்...3 முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக மனு!

ஆளுநரை சந்திக்கும் பாஜக மாநில நிர்வாகிகள்...3 முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக மனு!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை 3 முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக பாஜகவின் மாநில நிர்வாகிகள் இன்று மாலை சந்திக்கவுள்ளனர்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தலைமையில், இன்று மாலை 5 மணி அளவில் பட்டியலின தலைவர் தடா பெரியசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க உள்ளனர்.

அதாவது, கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், பட்டியலின மக்களுக்கான உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்ததை ரத்து செய்ய வேண்டும் எனவும், தலித் மக்கள் நல திட்டங்களுக்காக மத்திய அரசு 2022-2023 க்கு  ரூ.16,442 கோடி கொடுத்ததில் ரூ.10,420 கோடி செலவு செய்யவில்லை. இதை விசாரிக்க வேண்டும் எனவும், பஞ்சமி நிலம் குறித்து அரசாணைக்கு பதில் மற்றும் சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என‌வும் மனு அளிக்க உள்ளனர். 

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடர்பான ஆடியோ சர்ச்சை குறித்து ஆளுநரிடம் தமிழக பாஜக குழு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com