வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - டிஜிபி எச்சரிக்கை!

வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - டிஜிபி எச்சரிக்கை!
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்புகள் மீதும், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதி தொழிலதிபர்கள் இடையேயான ஆலோசனைக்கூட்டம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த ஆலோசனைக்கூட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் இடையே இருக்கக்கூடிய அச்சத்தை போக்குவது பற்றிய பல்வேறு விவகாரங்கள் குறித்தும், அவர்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டி.ஜி.பி சைலேந்திரபாபு, வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் குழப்பங்கள் தீர்ந்து இயல்பு நிலை திரும்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மொபைல் போனில் வரக்கூடிய லிங்குகளில் பயனாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com