தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க சென்னை மாநகராட்சி சார்பில் காவல் துறை இணைந்து பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் எனவும், பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள் சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை இணையதளத்தின் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.