”மாணவர்கள் வாக்களிக்கும் உரிமையை பெற விண்ணப்பிக்க வேண்டும்” - கமல்ஹாசன்

Published on
Updated on
1 min read

கல்லூரி மாணவர்கள் நாட்டு நடப்பைத் தெரிந்து வைத்துக் கொள்வதுடன் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தினார்.

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினாா். 

தொடா்ந்து மேடையில் பேசிய அவா், கல்லூரி மாணவர்கள் வாக்களிக்கும் உரிமையை பெற விண்ணப்பிக்க வேண்டும் எனவும், நாட்டு நடப்புகளை தெரிந்து வைத்து கொள்வதனுடன் கிராம சபைகளில் பங்கேற்க வேண்டும் எனவும் தொிவித்தாா்.

தான் நடிக்க வந்த காலத்தில் திரைத்துறை தன்னை மதிக்கவில்லை என்பதால் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்ததாக தொிவித்த கமல்ஹாசன், இருள் மறைந்து ஒளி வந்தே தீரும் என்பதை அனைவரும் உணரவேண்டும் என்றாா்.

மேலும் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதற்காக பாஜக அரசை பாராட்டுவதாக குறிப்பிட்ட அவா், ஒதுக்கீட்டை 2029-ம் ஆண்டுக்கு ஒத்திவைப்பது தவறான கருத்து என தொிவித்தாா்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com