"மாணவர்கள் உயிரிழப்பை அரசியலாக்க வேண்டாம்" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

"மாணவர்கள் உயிரிழப்பை அரசியலாக்க வேண்டாம்" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
Published on
Updated on
1 min read

நீட் விவகாரத்தில் மாணவர்களின் உயிரிழப்பை திமுகவினர் அரசியலாக்க கூடாது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே நாளை நடைபெற உள்ள கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் திருவள்ளூர் பகுதியில் பாஜக நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்று மணமக்களுக்கு பூ கொடுத்து வாழ்த்தினார் .

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல் முருகன்.காங்கிரஸ் மத்திய அரசாங்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகித்த போது நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது, நீட் தேர்வை எதிர்த்து திமுக உண்ணாவிரதம் இருப்பது தேவையற்றது, மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் வகையில் திமுக அரசு மாணவர்களை திசை திருப்பும் செயலில் ஈடுபட்டு வருகிறது

தற்பொழுது நடைபெறும் உயிரிழப்புகளை நீட்டுடன் தொடர்புபடுத்த கூடாது 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவும்போது இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்வது அந்த காலத்திலிருந்து வாடிக்கையாக உள்ளது அது அந்தந்த மாணவர்களின் சூழ்நிலையை பொறுத்து அந்த நேரத்தில் எடுக்கின்ற தவறான முடிவு அதை அரசியல் ஆக்க கூடாது.

 மாணவர்களுக்கு முறையான கவுன்சிலிங் கொடுத்து அவர்களுக்கு ட்ரெய்னிங் கொடுத்து நீட்டுக்கு தயார் செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. தமிழக மாணவர்கள் வெளிநாட்டில் சென்று மருத்துவ படிப்பை மேற்கொள்ளும் வகையிலான வாய்ப்பை நீட் தேர்வு வழங்கி உள்ளது

 பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் பட்டியலின மாணவர்கள் தற்பொழுது நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்கின்ற சூழ்நிலையை நீட் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது

மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது இதனால் தற்பொழுது பெருமளவில் ஏழை கிராமத்து மாணவர்கள் கூட மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கின்றனர் மேலும் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரியை திறந்து சாதனை படைத்துள்ளது மத்திய அரசு

 இதனால் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தற்பொழுது நீட் தேர்வில் இந்தியாவிலேயே தமிழக மாணவர்கள் முதலிடம் பிடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது எனவே திமுக அரசு இதை அரசியல் ஆக்க கூடாது என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com