ரக்ஷா பந்தனையொட்டி பிரபல மணற்சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக் சிவன் கடவுள் உருவத்துடன் ராக்கி கயிறை வடிவமைத்துள்ளார். ஒடிசாவின் பூரி கடற்கரையில் மையத்தில் சிவன் கடவுள் உருவத்தை வடிவமைத்து 10 அடி நீளத்தில் மணல் ராக்கியை வடிவமைத்துள்ளார். இந்த ஆண்டின் ரக்ஷா பந்தன் சிவனுக்கு மிகவும் உகந்த சவன் மாதத்தின் இறுதி திங்கட்கிழமையில் வந்துள்ளதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும் அதனால் தான் சிவ உருவத்துடன் கூடிய ராக்கியை உருவாக்கியதாக சுதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.