கரும்பு விவசாயத்தில் வெற்றி – கால்ஸ் ஆலையின் உறுதுணை!

மேலும் 8 ஏக்கரில் கரும்பு நடவு செய்ய உத்தேசித்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
sugar cane farmer
sugar cane farmerAdmin
Published on
Updated on
1 min read

கால்ஸ் குழுமத்தின் ஆரூரான் சர்க்கரை ஆலை மூலம் கரும்பு பயிரிட்டு நல்ல மகசூல் பெற்றதாக கரும்பு விவசாயி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையை அடுத்த மங்கநல்லூர் எடக்குடி கிராமத்தில் வசிக்கும் முன்னோடி விவசாயி பாண்டுரங்கன். இவர் கால்ஸ் நிறுவனத்தின் திருமண்டகுடி திரு ஆருரான் சர்க்கரை ஆலையை உள்ளடக்கிய கொல்லுமாங்குடி கோட்டப்பகுதியில் தனது 10 ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்தார்.

கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் கரும்பு நட்டு பயிரிட்ட நிலையில் அந்த பயிரானது வளர்ந்து வெட்டும் தருவாயில் வந்தடைந்தது. அவரது கரும்பு பயிர் செம்மை கரும்பு நாற்று மூலம் ஆலையின் மானிய திட்டத்தில் நடவு செய்யப்பட்டது.

அவருக்கு கால்ஸ் சர்க்கரை ஆலை மூலம் கரும்பு நாற்று வழங்கப்பட்டு, கடனாக உரம் மற்றும் உழவு செய்வதற்கான தொகையும் வழங்கப்பட்டது.

மேலும் அவரது கரும்பு பயிர் நன்றாக வளர்ந்து வெட்டும் தருவாய் வரை அப்பயிருக்கு தேவையான பொருட்களை வழங்கி ஆய்வாளர்கள் அடிக்கடி பார்வையிட்டு வந்தனர்.

இதனால் பயனடைந்த அந்த விவசாயி கூறும்போது, மேலும் 8 ஏக்கரில் கரும்பு நடவு செய்ய உத்தேசித்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும் கால்ஸ் நிறுவனத்திற்கு தனது நன்றி என விவசாயி தெரிவித்துள்ளார்.

இதேபோல பல்வேறு நடவடிக்கைகளால் கால்ஸ் நிறுவனம் கரும்பு விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வருவது குறிப்பிடதக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com