
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏராளமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஏழாம் நாளான இன்று சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்காடு படகு இல்லத்தில் படகு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
படகு போட்டியை நாமக்கல் மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஆடவர், மகளிர், தம்பதியினர் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.