மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்...நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம்...!

மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்...நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம்...!
Published on: 
Updated on: 
1 min read

தமிழகத்தில் நாளையிலிருந்து 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 3-ம் தேதியும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 30-ம் தேதியும் நிறைவடைந்தது. இந்நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 

இதனால் நாளை முதல் 1 - 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கோடை கால விடுமுறையில் தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் எவ்வித சிறப்பு வகுப்புகளையும் எடுக்கக் கூடாது என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com