இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் சுந்தர். சி! 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் இயக்குனர்.. கைகொடுக்குமா அரசியல் களம்?

புதிய நீதி கட்சி சார்பில் போட்டி இடுவதாக அறிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர். அதனையடுத்து மதுரை மத்தியில் வேட்பாளராக..
Sundar C
Published on
Updated on
2 min read

நடக்கவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல் முன்னதாக கலைகட்டிய நிலையில் தற்போது இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நாள் அறிவிக்கபடத்தையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்து பிரச்சாரத்தை தொடங்கியது. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் புது வரவாக இயக்குனர் சுந்தர் சி இணைந்துள்ளார். புதிய நீதி கட்சி சார்பில் போட்டி இடுவதாக அறிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர். அதனையடுத்து மதுரை மத்தியில் வேட்பாளராக களமிறங்குகிறார் சுந்தர் சி. என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக்கட்சியின் சார்பாக போட்டியிடும் இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம்.

sundar c election

புதிய நீதிக்கட்சிக்கு என் டி ஏ கூட்டணியில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கிய நிலையில், அதில் தற்போது ஒரு தொகுதியில் இயங்குனர் சுந்தர் சி போட்டியிடுவார் என்று செய்தி வெளியாகியுள்ளது. 'சன் ஆஃப் சிதம்பரம் பிள்ளை' என்று பெருமையுடன் அடையாளப்படுத்தப்படும் சுந்தர் சி, கலைத்துறையில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர். அரிசியால் களத்தில் கால் பாதித்துள்ளது தேர்தல் களத்தை சூடுபிடிக்க செய்துள்ளது. என். டி.ஏ கூட்டணியில் பாஜக வை சேர்ந்த நடிகை குஷ்பூ இவரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் இந்த கூட்டணியில் இடம் பெற்றதும் அதற்கான தேர்தல் பணிகளின் பங்களிப்பும் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மத்திய தொகுதியில் அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் முன்னதாக விண்ணப்பித்த நிலையில் அவர்களை ஏற்காமல் நட்சத்திர வேட்பாளரான சுந்தர் சி. யை தேர்வு செய்துள்ளது அதிமுக தலைமை. 

இந்த நகர்வு கைகூடும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது, காரணம் சுந்தர் சி அவர்கள் அனைவராலும் அறியப்பட்ட நபர் மற்றும்  அவரின் மனைவியும் நன்கு அறியப்பட்ட அரசியவாதி. மேலும் இந்த இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிடுவது கூடுதல் வாய்ப்பாக தெரிகிறது. மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சியின் இந்தத் தேர்தல் முன்னெடுப்புகள் தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தைக் கொடுத்துள்ளதாக தெரிகிறது. சுந்தர் சி யின் இந்த வருகையை கூட்டணி கட்சிகளும் அரசியல் பிரமுகர்களும் வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றர். கலைத்துறையில் பெற்ற அதே வரவேற்பையும் ஆதரவையும் மக்களிடம் பெறுவாரா நடிகர் சுந்தர்.சி என்று பார்ப்போம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com