
கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். எப்போதும் அவரை பார்க்க மக்கள் ஏராளமான அளவில் கூடுவது வழக்கம்.ஆனால் கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் என மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உயிரிழந்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் உட்பட பல தலைவர்கள் நாடு முழுவதிலிருந்தும் இரங்கல் தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. அதோடு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரம் குறித்த பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
தவெக தரப்பிலிருந்து எந்த ஒரு தரப்பையும் சாராத விசாரணை வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. மாநில அரசின் விசாரணை அமைப்புகள்மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் வளர்ந்து வரும் கட்சி, நியாயமான விசாரணை வேண்டும்” என்றும் கோரியுள்ளது.
கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு இந்த மனுக்களை விசாரித்து வந்த நிலையில் இதில் தமிழ்நாடு அரசு சார்பில் விஜய் ஏன் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை? அவர் நேரத்துக்கு வராதது தான் கரணம் என பல்வேறு குற்ற சாட்டுகளை முன்வைத்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கூட்டத்தில் சில ரவுடிகள் புகுந்ததால் தான் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.
மேலும் காவல் துறையினர் உத்தரவின் பேரில் தான் விஜய் கரூரில் இருந்து சென்றதாகவும், அவர் மீது தேவையில்லாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் “ஏன் மதுரை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது” என கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதில் தற்போது தீர்ப்பளித்துள்ள ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு கரூர் சம்பவத்தை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமையிலும் ஒரு குழு அமைகப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் ஓய்வு பெற்ற இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்களாக இருக்க கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.