பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுங்க: கேப்டன் டிவிட்  

தமிழகத்தில் 100 ரூபாயை தொடும் அளவிற்கு தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுங்க: கேப்டன் டிவிட்   
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் 100 ரூபாயை தொடும் அளவிற்கு தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின்  விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதாக, மத்திய அரசு  கூறுவதை தற்போதைய சூழலில் ஏற்றுக்  கொள்ள முடியாது. மேலும், டில்லி, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துவிட்ட  நிலையில், தமிழகத்திலும் 100 ரூபாய் எட்டி விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவ்வாறு விலை உயர்ந்தால் காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும், வாகனங்களின் வாடகை கட்டணமும் மேலும் உயரம் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, கொரோனா பாதிப்பால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி, பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com