

இன்று தவெக அரசில் கூடும் 2-வைத்து நாள் பட்ஜெட் கூட்டம் கூடுகிறது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். திருக்குறள் கூறி தொடங்கிய அமைச்சர் வினோத் உழவர்களை பற்று புகழ்ந்து பேசினார்.
"பணநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயகன் நீங்கள்" என்று முதல்வரை புகழ்ந்து பேசினார் அமைச்சர் வினோத். மேலும், முதல்வரை "கோட் சூட் போட்ட விவசாயி நீங்கள்" என்று தொடர்ந்து புகழ்ந்து பேசினார். தொடர்ந்து அவர் கவிதை வழியே முதலமைச்சரை புகழ்ந்து பேசிவந்த நிலையில் அவையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. ஆனாலும், சபா நாயகர் அவரை தொடர்ந்து படிக்கும் படி கூறினார். இதனை தொடர்ந்து சலசலப்பு மேலும் அதிகரித்தது. அதனால், சபாநாயகர் குறுக்கிட்டு, "அவை முன் வைத்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையினை மட்டும் படித்தால் போதும்" என்று கூறினார்.
அவைத்தலைவரின் அறிவுறுத்தலின் பேரில், அமைச்சர் தனது 2026-2027-ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் வாசித்தார். இதனைத்தொடர்ந்து, விவசாயத்தின் பரிணாம வளர்ச்சியை பற்றி பேசத்தொடங்கினார். மேலும், விவசாயமும், விவசாயிகளும் பல சவால்களை சந்தித்து வருவதாகவும், விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் ஆகிய அனைவரையும் வரவழைத்து பேசி இந்த அறிக்கையை தயார் செய்ததாகவும் அவர் கூறினார். இதனைத்தொடர்ந்து 'சூப்பர் எல் நினோ' இந்த ஆண்டு தொடங்கியதால் தமிழகத்தில் குறிப்பாக 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்டுள்ள , "மாவட்ட வேளாண்மை இடை ஏற்பட்டு திட்டம்" அமைக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.