2 நாட்கள் விடுமுறையை அடுத்து இன்று சட்டப்பேரவை கூடியது. அதில் பல்வேறு உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். மேலும், சட்டப்பேரவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும், மேகதாது விவகாரம் குறித்த உரிமை மீறல் கொண்டு வர சபாநாயகர் அனுமதி வழங்காததாலும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், கடும் அமலிக்கு நடுவே போய் கொண்டிருந்த சட்டப்பேரவை சிரிப்பலையிலும் திளைத்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தது. சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்ததோடு, அவையில் இருக்கின்ற உறுப்பினர்களுக்கு டம்ளரில் தண்ணீர்வைத்து கொண்டிருக்கிறார்கள் என்றும், காலம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் பழைய முறைப்படி டம்ளரில் தண்ணீர் வைப்பதும் என்பது வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக தண்ணீர் பாட்டில்களில் வைக்க முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார். அதன் பின்னர், குறுக்கிட்டு எழுந்த ஓ. பன்னீர்செல்வம், "பிரேமலதாவின் கருத்து ஏற்புடையது அல்ல" என்று கூறினார். இதற்கு காரணமாக அவர் கூறியது அவையில் சிரிப்பலையை உண்டுபண்ணியது.
"கோவம் வந்தால் தண்ணீர் பாட்டில்களை கொண்டு ஏறிய வாய்ப்பிருக்கிறது" என்று ஓபிஎஸ் பேசினார். இதற்கு பிரேமலதா, "தண்ணீர் பாட்டில்களால் மட்டுமல்ல டம்ளரிலும் தூக்கி அடிக்கலாம்' என்று சிரித்தபடி பதிலளித்தார். அதற்கு தங்கம் தென்னரசு எழுந்து, "முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தண்ணீர் எறிவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று கூறினார்; அவருடைய தனிப்பட்ட அனுபவத்தின் காரணமாக அதை அவர் குறிப்பிடுகிறாரா?, என்பதை அறிய விரும்புகிறேன்" என்று பேச அவை மீண்டும் சிரிப்பையால் நிறைந்தது.
காலையில் இருந்து காரசாரமாக சென்ற அவையை அப்படியே தலைகீழாக பிரேமலதா மாற்றினார். மேலும், தண்ணீர் என்றாலே பிரச்சனை தான் போல, அது காவிரியாக இருந்தாலும் சரி, டாஸ்மாக் தண்ணீராக இருந்தாலும் சரி மக்களிடையே பிரச்சனையாகவே இருக்கிறது என்று தண்ணீர் பாட்டிலைக் கொண்டு அரசியலாக பேசி முடித்தார். இந்த தண்ணீர் பிரச்சனையைக் குறித்து பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். அதற்கு தீர்வாக, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா முதல்வர்கள் புதிதாக பதவியேற்றுள்ளதால் நட்பு ரீதியாக பேசி இதற்கு முடிவு காணலாம். அதற்கு உடன்படவில்லை என்றால், சட்டரீதியாக சந்திக்கலாம் என்று பேசினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்