அரசு கட்டடங்களின் முகப்பு தோற்ற வரைப் படத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

அரசு கட்டடங்களின் முகப்பு தோற்ற வரைப் படத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
Published on
Updated on
1 min read

பொதுப்பணி துறையால் கட்டப்பட உள்ள அரசு பள்ளி கட்டடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அரசு கட்டடங்களின் முகப்பு தோற்ற வரை படத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

பொதுப்பணி துறை சார்பில் அரசு பள்ளி கட்டடம், மாணவ மாணவியர் தங்கும் விடுதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.

இந்நிலையில் நவீன முகப்பு தோற்றத்துடன் பொதுப்பணி துறையால் தயாரிக்கப்பட்டுள்ள கட்டடங்களின் முகப்பு தோற்ற வரைப்படத்தை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, பொதுப்பணி துறை கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com