சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் உயிரிழப்பு...

சவுதி அரேபியாவில்  தமிழக மீனவர் உயிரிழப்பு...
Published on
Updated on
1 min read

ராமநாதபுரத்திலிருந்து 20 நாட்களுக்கு முன் மீன்பிடித்தொழிலுக்காக சவுதி அரேபியா சென்ற மீனவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பாலைக்குடியைச் சேர்ந்த மீனவர் எழுவர்ராஜா. குடும்ப வறுமை காரணமாக சவுதி அரேபியா நாட்டுக்கு மீன்பிடி கூலியாக வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் தங்கும் இடத்தில் உயிரிழந்து கிடப்பதாக அவரது நண்பர்கள் அளித்த தகவலினால் அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உயிரிழந்த மீனவர் எழுவர் ராஜாவின் உடலை தாயகம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உரிய இழப்பீடு வழங்கவும் அவரது கும்பத்தினர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com