கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள சிறிய மருத்துவமனைகளிலும் கூட ஆக்சிஜன் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு தமிழக சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்
Published on
Updated on
1 min read

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள சிறிய மருத்துவமனைகளிலும் கூட ஆக்சிஜன் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு தமிழக சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய தொகுப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 80 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும், தற்போது, 3 லட்சத்து 42 ஆயிரத்து 820 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த தடுப்பூசிகள் நாளை மதியத்திற்குள் தீர்ந்துவிட வாய்ப்பு உள்ளது எனக் கூறினார்.

கொரோனா 2-வது அலையில் இருந்தே மீளாத நிலையில், ஐ.சி.எம்.ஆரில் இருந்து 3-ஆம் அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர்,  கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள சிறிய மருத்துவமனைகளிலும் கூட ஆக்சிஜன் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com