
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வது குறித்து மருத்துவத் துறை ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், சுகாதாரா மாநாடு 2022-ஐ முதலமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார். மருத்துவத் துறையில் பிற மாநிலங்களைவிட தமிழகம் சாதனை புரிந்து வருவதாக குறிப்பிட்டு, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக கூறினார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறினார்.