விஜய் பதவி ஏற்பதில் தொடரும் சிக்கல்! அதிமுக தலைமை கூட்டணிக்கு ஆலோசனை விசிக - கம்யூனிஸ்டுகள் கையில் முடிவா?

காங்கிரசுடன் சேர்ந்து வெறும் 112 பேர் மட்டுமே வந்துள்ள நிலையில் ஆளுநர் அழைப்பு விடுக்க தயங்குவதாக கூறப்படுகிறது.
ஆளுநருடன் விஜய்
ஆளுநருடன் விஜய் ஆளுநருடன் விஜய்
Published on
Updated on
1 min read

தவெக தலைவர் விஜய் நாளை முதல்வராக பதவி ஏற்க வாய்ப்பில்லை எனத் தகவல். மே 8 அல்லது 9 அன்று பதவியேற்பு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. அறுதி பெரும்பான்மைக்கு தேவைப்படும் 118 MLA-க்களை தவெக பெறாததால் விஜய் பதவி ஏற்பதில் சிக்கல் தொடர்கிறது. தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து பதவி ஏற்ககோரி கடிதத்தை கொடுத்திருந்தார். போதிய ஆதரவு இல்லாதக் காரணத்தால் விஜய் பதவி ஏற்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. நாளை விஜய் பதவி ஏற்பதற்கு ஏற்பாடுகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் பதவியேற்பு நாளை நடக்க சத்தியம் இல்லை என்று ஒருபுறம் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தவெக MLA-க்கள் 107 பேர் உள்ள நிலையில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தது. 2 தொகுதிகளில் விஜய் வெற்றி பெற்ற நிலையில் ஒரு தொகுதில் அவர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

தவெக சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள MLA-க்களின் பட்டியல் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆதரவு MLA-க்கள் முழுமையாக சமர்ப்பித்த பின்பு ஆட்சி அமைக்கலாம் என்று ஆளுநர் மளிகை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அதிமுக முடிவு குறித்து இன்று எடப்பாடி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. மேலும் நாளை விசிக மற்றும் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என்று கூறிய நிலையில் அதிமுகவும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரசுடன் சேர்ந்து வெறும் 112 பேர் மட்டுமே வந்துள்ள நிலையில் ஆளுநர் அழைப்பு விடுக்க தயங்குவதாக கூறப்படுகிறது.

தற்போதுவரை எந்த கட்சிகளும் தங்களது ஆதரவினை வழங்காத நிலையில் இன்று இரவு அல்லது நாளைத்தான் ஆதரவு கூட்டணி குறித்து தெரியவரும் என்று கூறப்படுகிறது. மேலும், விசிக, கம்யூனிஸ்டுகள் கைகளில்தான் முடிவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் தரப்பில் இருந்து பதவி ஏற்றுவிட்டு சட்டமன்றம் சென்ற பிறகு தனது பெரும்பான்மையை நிரூபிக்கலாம் என்று இருந்த நிலையில் ஆளுநர், பெரும்பான்மையை நிரூபித்த பின்பு பதவியேற்பிற்கு அழைப்பு விடுப்பதாக ஆளுநர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. அதனால் நாளை விஜய் பதவி ஏற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com