"இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக சாராயம் விற்பனை"- அன்புமணி!

"இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக சாராயம் விற்பனை"- அன்புமணி!
Published on
Updated on
2 min read

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக சாராயம் விற்படுவதாக பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் சாடியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரி, படூர், கேளம்பாக்கம், வெளிச்சை, மாம்பாக்கம், பணங்காட்டுபாக்கம் ஆகிய பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் கழக கொடி ஏற்றி கல்வெட்டுகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

அப்போது மாம்பாக்கம் பகுதியில் மக்கள் மத்தியில் பேசிய அன்புமணி ராமதாஸ், இந்த ஆட்சியில் இளைஞர்கள், முதியவர்கள், மாணவர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், மீனவர்கள், நெசவாளர்கள் இப்படி ஏதாவது துறையை சேர்ந்தவர்கள் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று சொல்ல முடிகிறதா? என கேள்வி எழுப்பிய அவர், ஒரு பகுதியிலோ அல்லது மாநிலத்திலோ யாராவது சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால், அவர்களை மாற்ற வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் இருப்பார்கள் 
ஆனால் தமிழகத்தில் நீங்கள் பொறுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து, சாராயத்தை விற்றுதான் தமிழக அரசு அரசை நடத்தி வரவதாகவும்  இதில் தற்போத ஆட்சி நடத்தும்  திமுக அரசை மட்டுமின்றி இதற்கு முன்னதாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசையும் குற்றம் சாட்டிய அவர் இந்தியாவிலேயே அதிகமாக சாராயம் விற்கும் மாநிலம் தமிழகம்தான் என தெரிவித்தார். 

ஆனால் மதுவிலக்கு துறை அமைச்சருக்கு அதைப்பற்றி தெரியவில்லை எனவும் முருகன் மற்றும் பெருமாள் கடவுள்கள் பெயரை வைத்துக் கொள்ளும் சாராயத்துறை அமைச்சர், சாராயத்தை விற்பனை செய்வதோடு விளம்பரமும் படுத்துவதாக குற்றம் சுமத்தினார்.

இந்தியாவில் அதிக அளவு  சாலை விபத்துக்கள், தற்கொலைகள், இளம் விதவைகள், கல்லீரல் பிரச்சனை, மனநல நோய் பிரச்சனை, இப்படி அனைத்தும் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது எனவும்  இதற்கு காரணம் மது என குற்றம் சாட்டிய அன்புமணி ராமதாஸ் இதை குறைக்க தமிழக அரசுக்கு ஒரு துளியும் மன வரவில்லை என்று கூறினார். மேலும் தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இரண்டு துறை தான் வளர்ந்துள்ளதாகவும் ஒன்று சினிமாத்துறை மற்றொன்று சாராயத்துறை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com