

சென்னை வேளச்சேரியில் மிகவும் பழமையான வாசுதேவ பெருமாள் கோவில் சிதிலமைடந்து ஆக்கிரமிப்பினால் கோவிலுக்கு செல்ல வழியில்லாம் பாழந்துள்ளது. இதனை, இந்து அறநிலையத்துறை அமைச்சர் அமைச்சர் சேகர்பாபு, தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்த போது, இந்து அறநிலையத்துறை சார்பில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடக்காத கோவில்களை கண்டறிந்து அவற்றிற்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நந்தவனங்கள் பராமரிப்பு, கோவில்களை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து என்றார்.
இந்நிலையில் முகநூலில் வாசுதேவ பெருமாள் கோவில் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து தகவல் அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எனக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் இன்று ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்றும், இன்னும் 2 நாட்களில் இந்த இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் ஆய்வு நடத்த நடத்தப்படும் என்று கூறிய அமைச்சர், 1956ம் ஆண்டு இந்த கோவில் குறித்த குறிப்பு ஒரு புத்தகத்தில் உள்ளது. எனவே இதுகுறித்த முழு விவரங்களையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கோவில்கள் வரவு செலவு கணக்கை இணையத்தில் வெளியிடுவது குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவருவதாகவும் விரைவில் இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
அறநிலையத்துறையில் கோரிக்கைகளை பதிவிடுக என்ற இணைய தளத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கைகளும், மனுவாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வந்துள்ளது என்று கூறிய அமைச்சர், அவற்றை நிறைவேற்ற ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இன்னும் 1 வருடத்திற்குள் அனைவரும் வியப்படையும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கை வெளிப்படை தன்மையோடு நிறைவேற்றப்பட்டிட்டுக்கும் என்று கூறிய அமைச்சர், தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் திருப்பதிக்கு இணையாக மாற்ற, வரும் 17ஆம் தேதி இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது என்றும் கூறினார்.