நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள்...வாழ்த்து தெரிவித்த தமிழிசை!

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள்...வாழ்த்து தெரிவித்த தமிழிசை!
Published on: 
Updated on: 
1 min read

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக ஆசிரியர்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசுப் பள்ளி ஆசிரியை மாலதி இருவரும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழிசை சவுந்திரராஜன் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென் தமிழக மண்ணிலிருந்து இருவர் நல்லாசிரியர் விருத்துக்கு தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com