தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் மறைவு... முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் மறைவுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  
தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் மறைவு... முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்
Published on
Updated on
1 min read

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயாரும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி இன்று அதிகாலை உயிரிழந்தார். தெலுங்கானாவிலிருந்து கிருஷ்ணகுமாரின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்படும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ” காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் அவர்களின் மனைவியும் ,மாண்புமிகு தெலுங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயாருமான கிருஷ்ணகுமாரி அவர்கள் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உற்ற துணை இழந்து வாடும் குமரி அனந்தன் அவர்களுக்கும், தாயை இழந்த துயரத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி, தெலுங்கானா முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com