பட்டாசு விற்பனைக்காக டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு...!

பட்டாசு விற்பனைக்காக டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு...!
Published on
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்காக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. அதன்படி, அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 12ம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 55 கடைகள் அமைப்பதற்கான டெண்டரை சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிவித்துள்ளது. விரைவில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு கடைகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com