

2026 தேர்தலுக்குள் தமிழகத்தின் நிலையே தலைகீழாக மாறிவிடும் என்பதில் சிறு மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜனவரிக்கு பிறகுதான் கட்சிகளின் கூட்டணி குறித்து ஒரு தெளிவான நிலைப்பாடு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது மட்டும்தான்.
மேலும், இம்முறை தேர்தலில் திமுக வென்றதன் முக்கிய காரணம் அவர்கள் அளித்த வாக்குறுதிகள் தான். நீட் ஒழிப்பு, கணினி ஆசிரியர்கள் நியமனம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்களை களைவது, தூய்மியா பணியாளர் பனி நிரந்தரம் உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகளை நிரைவேற்றுவதாக கூறித்தான் ஆட்சி அமைத்தது. ஆனாலும், கொடுத்த வாக்குறுதிகளில்,
வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, கணினி ஆசிரியர்கள் நியமனம், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, பூரண மது விலக்கு, நீட் ரத்து, துய்மை பணியாளர் பணி நிரந்தரம்,பழைய ஓய்வூதியம் திட்டம், முதியேர் ஓய்வூதியம் உயர்வு
உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வருகிற ஏப்ரல் மாதம் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்க்கு முன்னதாகவாவது இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால், என்ன செய்வது என்ற அச்சத்திலே மாநிலத்தின் முக்கியமான துறைகள் போராட்ட்டத்தில் இறங்கினர்.
தூய்மை பணியாளர் போராட்டம்!!
ஒப்பந்த ஊழியர்களாக இருக்கும் தூய்மை பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், துப்புரவு துறையை தனியாருக்கு ஒதுக்கக்கூடாது, என நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஆகஸ்ட் மதம் போராட்டம் தொடுத்தனர், ஆனால் இன்றுவரை அவர்களின் போராட்டம் ஓயவே இல்லை
செவிலியர் போராட்டம்!
மாநிலம் முழுவதும் தொகுப்பூதியத்தைப் பெற்றுக்கொண்டு தற்காலிகப் பணியில் இருக்கும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் இரண்டாண்டு காலம் பணியாற்றிய பிறகு அவர்கள் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனச் சொல்லப்பட்டது.சுமார் 15,300 பேர் இப்படி செவிலியர்களாகச் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சுமார் 7,000 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்ட நிலையில், சுமார் 8,300 பேர் தற்காலிக செவிலியர்களாகவே பணியாற்றி வருகின்றனர். இவர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருந்தது.
"கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வந்தபோது, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்' என்று தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டது, குறிப்பிடத்தக்கது.
இடை நிலை ஆசிரியர்கள் போராட்டம்!
சென்னையில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்கவில்லை.
இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் மணி பேசுகையில், “மாநிலம் முழுக்க, கிட்டத்தட்ட அரசின் அனைத்து நிறுவனங்களும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது இதுவே முதல்முறை, அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சொல்லித்தான் கேட்கின்றனர். ஆனால் இந்த ஆசிரியர்களின் வாக்கு வங்கி என்பது திமுக -விற்கு மிக மிக முக்கியமான அவசியமான ஒன்று. ஏனெனில் கலைஞர் காலத்திலிருந்தே ஆசிரியர்கள் திமுக -வின் பாரம்பரிய வாக்கு வங்கியாக உள்ளனர். ஆனால் இம்முறை அந்த நிலை மாறியுள்ளதாகவே தோன்றுகிறது. வாக்குறுதி விஷயத்தில் எடப்பாடி குறைந்தபட்ச நேர்மையையாவது கடைபிடித்தார். ஆனால் ஸ்டாலின் அதை செய்யாமல் இருப்பது மிகத்தவறு” என பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.