மீண்டும் உண்ணா போராட்டம் அறிவிக்கும் ஆசிரியர்கள் : காரணம் என்ன?

மீண்டும்  உண்ணா போராட்டம் அறிவிக்கும் ஆசிரியர்கள் : காரணம் என்ன?
Published on
Updated on
1 min read

பிப்ரவரி 17 ல்  உண்ணாவிரதம்

திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பிப்ரவரி 17 ல் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு.

மதுரையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய பிரகாஷ் "ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

திமுக தேர்தல் வாக்குறுதி


 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது, ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு மறு நியமன போட்டி தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும், தற்போது உயர்த்தப்பட்ட பணி நியமன வயது வரம்பு 45 ஆக உள்ளதை பழையபடி 57 வயதாக உயர்த்த வேண்டும், திமுக தேர்தல் வாக்குறுதியின் படி ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்" என கூறினார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com