”ஆசிரியர்கள் கைது; மனிதநேயமற்ற செயல்” - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

”ஆசிரியர்கள் கைது; மனிதநேயமற்ற செயல்”  -  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Published on: 
Updated on: 
1 min read

அறவழியில் போராட்டம் செய்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது மனிதநேயமற்ற செயல் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார்.

சென்னை திருவல்லில்கேணியில் ஆசிரியர்களை சந்தித்து பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈவு இரக்கமற்ற செயலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபடுவதாக குற்றச்சாட்டினார். 

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டதையடுத்து, அவர்களை  உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், சிரியர்கள் போராட்டத்திற்கு அதிமுக முழு ஆதரவு தரும் எனவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com